Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவனத்தில் “ரூ.1 1/4 லட்சம் மோசடி”…. ஊழியர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேலாண்டிபாளையம் பகுதியில் பாரத் டோலியா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் நவீன்குமார்(45) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நவீன் குமார் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

அதில் 3 3/4 லட்ச ரூபாயை நவீன்குமார் திரும்ப கொடுத்துவிட்டார். மீதமுள்ள 1 1/4 லட்ச ரூபாயை கொடுக்காமல் நவீன்குமார் மோசடி செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாரத் டோலியா சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நவீன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |