Categories
மாநில செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை…. தமிழக அரசு அதிரடி…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களாக கன மழை விடாமல் பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக சென்னையில் அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.தனியார் நிறுவனங்கள் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கலாம் அல்லது வீட்டில் இருந்து பணிபுரியும் வகையில் ஏற்பாடு செய்யலாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |