70% கல்வி கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாளை கர்நாடகா பள்ளிகள் ஒரு நாள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோன பரவலின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது கர்நாடகாவில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனையடுத்து எட்டாம் வகுப்பிற்கு பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, கர்நாடக நிதியுதவி பெறாத பள்ளிகள், கர்நாடக பிரைமரி மற்றும் செகன்ட்ரி பள்ளிகள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் ஒரு நாள் போராட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு நாளை(பிப்ரவரி 23) வகுப்புகள் நடைபெறாது என்றும் அதை ஈடு செய்யும் விதமாக வருகிற சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என்றும் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி பெங்களூரில் உள்ள சிட்டி ரயில்வே ஸ்டேஷனில் தொடங்கி ஃப்ரீடம் பார்க் வரை பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதில் கல்வி கட்டணமாக பள்ளிகள் 70 சதவீதம் வரை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற மாநில அரசின் உத்தரவை திரும்பப் பெறுதல் மற்றும் கல்வித் துறையில் நடக்கும் பல்வேறு ஊழல் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த எண்ணியுள்ளனர்.