Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க செப்.30 ஆம் தேதி வரை அவகாசம்..!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் முதல் தவணை கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள சில தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்து வருவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து தமிழக அரசு அதற்கு தடை விதித்தது. தமிழக அரசு பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தனியார் பள்ளிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன. அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், கூடுதல் கட்டணம் வசூலித்ததாக தற்போது வரை 75 புகார்கள் வந்திருப்பதாக பள்ளிக்கல்வித் துறை தரப்பு கூறியது.

மேலும் கூடுதல் கட்டணம் வசூல் செய்த 29 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் கூறியது. இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதே சமயத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |