தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைந்ததால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். ஆசிரியர்களும் மாணவர்களை அன்போடு வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் அங்கேயே வாங்க வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது. மேலும் கொரோனா காரணமாக பெற்றோர்கள் கடந்த இரண்டு வருடங்களாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பீஸ் கட்ட சொல்லி அழுத்தம் கொடுக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.