இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த தொற்று பாதிப்பால் பல மாணவர்கள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் தொற்று காரணமாக பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து விலகளித்து, அவர்கள் தொடர்ந்து அதே பள்ளியில் படிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை நேற்று உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் தற்போது அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள் படித்தால் அவர்களுக்கும் கல்வி கட்டணத்தை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட வேண்டும். மேலும் இந்த மாணவர்கள் அதே பள்ளியில் கல்வி படிப்பை தொடர்வதை உறுதி செய்ய வேண்டும். இது தனியார் பள்ளியில் பயிலும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பத்தை சார்ந்த மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.