தமிழகத்தில் அங்கீகாரமின்றி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பயிலும் பள்ளிகள் உரிய அங்கீகாரத்துடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.கட்டட உறுதியின்மை சான்று இல்லாத பள்ளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் தொடக்க பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தனியார் பள்ளிகளில் போதிய இருக்கைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அனைத்து பள்ளிகளிலும் கல்வி கட்டணம் தொடர்பான பட்டியல் தகவல் பலகையில் வைக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.