Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளியில் மாணவி மரணம்….. அடுத்த அதிர்ச்சி சம்பவம்…. பள்ளிக்கு விடுமுறை….!!!!

தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து அப்பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவிகள் தொடர்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது என்று பலமுறை தெரிவித்த பின்னரும் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. பள்ளிகளில் மனநல ஆலோசனை வழங்கப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு தற்கொலை என்ற எண்ணம் வரக்கூடாது என்பதற்காக பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் மட்டும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் அருகே பசுவந்தனை சில்லாங்குளத்தில் தனியார் பள்ளியில் உள்ள கழிப்பறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிளஸ் டூ படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து பள்ளிக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இது தற்கொலையா? கொலையா? என்று கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பள்ளிக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |