Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.10000 நிதி…. சீமான் வலியுறுத்தல்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்து வந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதனால் தனியார் பள்ளிகளில் குறைந்த அளவு ஆசிரியர்களை வைத்தே ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இதனால் மற்ற ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லாததால் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வருமானம் இல்லாமல் தவித்து வருவதாக சீமான் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் அரசு ஆசிரியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்படும் நிலையில் பல தனியார் பள்ளிகள் 50 சதவீத விழுக்காடு ஆசிரியர் மட்டுமே பணியில் அமர்த்தியுள்ளனர். அவர்களுக்கும் குறைந்த ஊதியம் தான் கொடுக்கப்படுகிறது. எனவே அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |