Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான சூப்பர் வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க……..!!

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக வேலையில்லாமல், படித்து முடித்த பட்டதாரி இளைஞர்கள் ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் தமிழகத்தில் இருந்த ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் தற்போது திறக்கப்பட்டு இயல்பு நிலையில் செயல்பட்டு வருகிறது. மேலும் பல வேலை வாய்ப்புகளும், அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது சேலம் மாவட்டத்தில் வருகிற மார்ச் 10 ஆம் தேதி அன்று இந்த வேலைவாய்ப்பு முகாமானது நடத்தப்படுகிறது. இந்த முகாமை  பத்மவாணி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, பத்மவாணி மகளிர் கல்வியியல் கல்லூரி, KS மகளிர் கல்வியல் கல்லூரி மற்றும் Tamilnadu Private School Teachers Recruitment Association ஆகியோர் இணைந்து நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாமானது சேலம் மாவட்டம் பெரியார் பல்கலைக் கழகத்துக்கு எதிரேயுள்ள பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ள தகுதியானவர்கள் B.Ed, M.Ed,M.Phil படித்து முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம் எனவும் கல்வியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும்,இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு,மேலும்  நேர்முகத்தேர்விலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இதனை தொடர்ந்து இந்த முகாமில் தனியார் பள்ளிகள் நேரடியாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

மேலும் நேர்முகத் தேர்வுக்கு வரும் பட்டதாரிகள் தங்களின் கல்வி சான்றிதழ்கள் அல்லது நகல் சான்றிதழ்கள் கொண்டு வரவேண்டும் எனவும் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதையடுத்து முன்பதிவு செய்து விட்டு 20.03.2022 அன்று நேர்முகத் தேர்வுக்கு நேரில் வர வேண்டும். அவ்வாறு முன்பதிவு செய்ய http ://www .tnschoolteachers.com/register2  என்ற இணையதள முகவரியை அணுகவும்.

Categories

Tech |