தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பள்ளி நிர்வாகம் தங்களது பேருந்துகளில் அழைத்துச் சென்று மீண்டும் வீடுகளுக்கு கொண்டு சென்று விடுகிறது. இந்த வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களும், மோட்டார் வாகன ஆய்வாளர்களும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா ,எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவை கட்டாயம் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பள்ளி வாகனங்களின் முன் பக்கமும், பின்பக்கமும் தலா ஒரு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்றும், பின்புறம் சென்சார் கருவி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிகள் தங்களது வாகனங்களில் இதனை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது .