தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அதன் முக்கிய பகுதியாக தமிழகம் முழுவதும் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு ஆவின் பால் விலையை குறைத்ததை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்றுள்ளார். அதேநேரம் தனியார் நிறுவனங்கள் குறைவான கொள்முதல் விலையில் பெறுவதுடன், ஆவின் பாலை விட 20 ரூபாய் வரை அதிகமாக மக்களுக்கு விற்பதையும் சுட்டிக்காட்டி, இதனால் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் நஷ்டம் ஏற்படுகிறது. தனியார் பால் விலையையும் கொள்முதல் விலையையும் அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.