Categories
தேசிய செய்திகள்

தனியார் பால் விலை உயர்வு… ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை…!!!!!

தனியார் பால் விலை உயர்வின் காரணமாக ஆவின் நிறுவனத்திற்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளிடமிருந்து நாள்தோறும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகின்றது. திமுக ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றும் விதமாக பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் ஜிஎஸ்டி வரி உயர்வை காரணம் காட்டி தயிர், நெய், மோர் விலையை 5 மற்றும் 12% என ஆவின் நிறுவனம் உயர்த்திருக்கிறது.

இந்த சூழலில் தனியார் நிறுவனங்கள் பால்விலை லிட்டருக்கு நான்கு ரூபாய் வரை உயர்த்தியிருக்கின்றது. இதனால் ஆவின் நிறுவனத்தை தேடி நுகர்வோர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். ஆனால் ஆவின் தரப்பில் கொள்முதலில் கவனம் செலுத்தாமல் தனியாரிடம் பாலை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் வருகின்ற  நாட்களில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடும் ஏற்படும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

மேலும் இதே நிலை நீடித்தால் பால் பவுடர், வெண்ணை, நெய், தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள் உற்பத்தியும் பாதிக்கப்படும். அதனால் பால் கொள்முதல் குறைந்த மாவட்டங்களில் அதனை அதிகரிக்க பால் கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கு பால்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கின்றனர். மேலும் உரிய கவனம் செலுத்தாத அதிகாரிகள் மீது சாட்டையை கழற்றி சுழற்றவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

Categories

Tech |