Categories
மாவட்ட செய்திகள்

தனியார் பேருந்திலும் அதிரடி சலுகை…. பெண்கள் மகிழ்ச்சி…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடத்தப்பட்டு மே இரண்டாம் தேதி வாக்குப் பதிவுகள் எண்ணப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றியை கைப்பற்றியது. ஆனால் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றார். மேலும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர்.

இதையடுத்து முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், மகளிருக்கு நகர பேருந்துகளில் இலவசம் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இது பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தனியார் பேருந்து நிறுவனமும் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. நாமக்கல்லில் 15 கிலோமீட்டர் பயணிக்க பெண்களுக்கு ரூ.2, ஆண்களுக்கு ரூ.10 என தனியார் பேருந்து உரிமையாளர் குமரேசன் அறிவித்துள்ளார். இதனால் அப்பகுதி பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |