இன்று மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில் பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமானவர்கள் பயணம் செய்தனர். அந்த பேருந்து சீர்காழி தென்பாதி அருகே சென்ற போது முன்னால் சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது பேருந்து உரசியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் படியில் பயணம் செய்த விஜயராஜ் (வயது15 ), அர்ஜுனன்(17) என்று 2 பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த 2 மாணவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சீர்காழி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் சிறிது நேரம் சிதம்பரம்-மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.