தனியார் பேருந்தின் அடியில் புகுந்து மோட்டார் சைக்கிள் சிக்கியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
விருதுநகர் மாவட்டத்திலிருந்து அருப்புக்கோட்டை நோக்கி 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு தனியார் பேருந்து அருப்புக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எதிரெதிரே வந்த மோட்டார் சைக்கிளும் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரண்டு பேர் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
இதையடுத்து தகவல் அறிந்துசம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதன் பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சத்துணவு அமைப்பாளர் செல்வியும் அவரின் மகன் இன்ஜினியர் செல்வகுமார் என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.