Categories
தேசிய செய்திகள்

தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து…. 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

ஆந்திர மாநிலம் அல்லூர் பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 40 பேர் விஜயவாடா கோவிலுக்கு தனியார் சுற்றுலா பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் அல்லூரி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 35 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |