தனியார் பேருந்தும் ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் விளாங்காட்டுவலசு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த ஸ்கூட்டர் தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் வந்த பி.சந்தோஷ்(24), ஆர். சந்தோஷ்(24) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் ஆர்.சந்தோஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மற்றொரு வாலிபருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.