Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்”…. தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்….!!!!!

தபால் துறை தனியார் மயமாக்கும்  முடிவை கைவிட வேண்டும் என்பன போன்ற இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் இணைந்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் தபால் துறை ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்த  போராட்டத்தால் ஊழியர்கள் பலர் பணிக்கு வரவில்லை. இதனால் தபால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி தபால் ஊழியர் சங்க கூட்ட செயலாளர் வெள்ளியங்கிரி கூறியபோது, தபால் துறையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்க முயற்சிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். மேலும் தபால் துறை சேமிப்பு பிரிவை இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கிக்கு மாற்றுவதை திரும்ப பெற வேண்டும், புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொழிற்சங்கங்களின் மீதான தாக்குதல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும், கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் போன்ற 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுகின்றது.

இந்த போராட்டத்தில் அலுவலக கண்காணிப்பாளர்கள் அதிகாரிகள் சிலர் பங்கேற்கவில்லை. மேலும் தபால் துறையில் உள்ள அனைத்து சமயங்கள் தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஈரோடு கோபி பவானியில் உள்ள மூன்று தலைமை அலுவலகங்கள் 67 துணை தபால் அலுவலகங்கள் 252 தபால் கிளை அலுவலகங்களில் பணியாற்றும் 820 ஊழியர்கள் 600க்கும் மேற்பட்டவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |