தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரித்துள்ளது. அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான ஓராண்டு கட்டணம் ரூபாய் 4.3 லட்சம் முதல் 4.5 லட்சம் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான ஓராண்டு கட்டணம் ரூபாய் 12.5 லட்சத்திலிருந்து ரூபாய் 13.5 லட்சம் உயர்த்தி உள்ளது. மேலும் வெளிநாடு வாழ் இந்தியர் இடங்களுக்கான ஆண்டு கட்டணம் ரூபாய் 23.5 லட்சத்திலிருந்து 24.5 லட்சமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இருக்கின்ற 18 மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.