Categories
அரசியல் மாநில செய்திகள்

தனியார் மருத்துவமனையில்…. இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டார் மு.க ஸ்டாலின்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இது குறித்து பேசிய  அவர் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும். தடுப்பூசி போட்டுகொண்டு நம்மையும் நம் நாட்டு மக்களையும் பாதுகாப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |