Categories
மாநில செய்திகள்

தனியார் ரயில் திட்டம் அமல்… விரைவில் மத்திய அரசு ஒப்புதல்… கட்டணத்தை நிர்ணயிக்க அரசு அனுமதி…!!!!!

இந்திய மக்கள் பலரும் சிறந்த போக்குவரத்து பயணமாக ரயில்களை தேர்ந்தெடுக்கின்றார்கள். அந்த வகையில் மக்களுக்கு ஏற்ற விதமாக ரயில்வே நிறுவனமும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது வரை இந்திய துறை மத்திய அரசின் கீழ் தான் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கூடிய விரைவில் தனியார் நிறுவனங்களும் ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளிக்கலாம் என்பது போன்ற தகவல்கள் அவ்வபோது வந்த வண்ணம் இருக்கின்றது. முக்கிய நகரங்களில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில்கள் மற்றும் அதன் வழித்தடங்களில் ஒரு சிலவற்றை தனியாருக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றது. ஆனால் மத்திய அரசு அமைச்சகம் தனியாருக்கு ரயில்களை இயக்குவதற்கான அனுமதி வழங்கி ஒப்பந்தமும் வெளியிட்டு இருக்கிறது.

மேலும் மத்திய அரசு தேர்வு செய்து வழங்கும் இடங்களில் தனியார் ரயில்கள் 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கு முதற்கட்டமாக 150 ரயில்களை தனியாருக்கு வழங்க மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கின்றது. மேலும் இந்தத் திட்டம் எப்படி செயலாற்றப்படுகிறது என்பதை பொறுத்து தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டிருக்கிறது. 150  இடங்களில் இயக்கப்பட இருக்கும் ரயில்களுக்கு அந்தந்த தனியார் நிறுவனங்களை டிக்கெட் கட்டணத்தையும் நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தனியார் நிறுவனங்களால் இயக்கப்பட இருக்கும் இந்த ரயில்கள் மொத்தமாக 16 பெட்டிகள் வரை இருக்கலாம் என ரயில்வே துறையின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரயில்வே துறையின் மேம்பாட்டிற்காகவும் தனியார் துறையின் நலனுக்காகவும் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கின்றது என கூறப்படுகிறது.

Categories

Tech |