நடிகை பூஜா ஹெக்டே, தனியார் விமான பணியாளர் ஒருவர் தங்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக டுவிட்டரில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமா உலகில் முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் அண்மையில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இத்திரைப்படம் பல விமர்சனங்களை பெற்றாலும் வசூலை அள்ளிக் குவித்து சாதனை படைத்திருகின்றது. இந்நிலையில் பூஜா ஹெக்டே தனியார் விமான பணியாளர் ஒருவர் தங்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.