Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தனி அறையில் அடைத்து வைத்திருந்த… பெண் தொழிலாளர்கள் 19 பேர் மீட்பு…!!

திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒரிசா பெண்கள் 19 பேரை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. வெளி மாநிலத்தில் இருந்து பல பெண்கள் தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் வடமாநிலத்தில் இருந்து வரும் பல பெண்கள் பாலியல் குற்றங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

இதேபோன்று திருப்பூர் வேலம்பாளையம் பின்னலாடை நிறுவனத்தில் பணிக்கு வந்த ஒரிசா பெண் தொழிலாளர்களிடம் செல்போன்களை பறித்து தனி அறையில் அடைத்து வைத்துள்ளதாக புகார் வந்தது. இதையடுத்து சமூகநல துறையினர் மற்றும் வருவாய் துறையினர் நேரில் ஆய்வு செய்து 19 பேரை மீட்டனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

Categories

Tech |