Categories
பல்சுவை

தனி ஒருத்தனுக்கு 39 மனைவிகள், 94 பிள்ளைகள்…. இப்படிப்பட்ட மனிதரை பாராட்டியே ஆகணும்….!!!!

மிசோரம் தலைநகர் ஐஸ்வாவில் இருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்தாங் என்ற கிராமத்தில் சியோங்ககா அகா சியோன் வசித்து வருகிறார். அவருக்கு 39 மனைவிகள், 94 பிள்ளைகள் மற்றும் 33 பேரன் பேத்திகள் உள்ளனர். இதுதான் உலகத்திலேயே மிகப்பெரிய குடும்பமாகும். இவர் அந்த ஊரிலுள்ள பெண்களெல்லாம் திருமணம் செய்து கொள்கிறார். இவருக்கு திருமணமாகி விட்டது என்று தெரிந்தும் பல பெண்கள் இவரை விரும்புகின்றனர்.

இவரது வம்சாவளியில் ஆண்களுக்கு பலதார மணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் இவர் பல பெண்களை திருமணம் செய்து கொண்டார். இதன் மூலமாக உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் என்ற பெருமையும் இவர் பெற்றுள்ளார். இவரது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு தினசரி உணவு அதிக அளவு தேவைப்படுவதால் இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தனது பேரக்குழந்தைகள் பிள்ளைகள் படிப்பதற்கு தனி பள்ளிக்கூடத்தையும் இவர் நடத்தி வருகிறார். இன்றைய காலகட்டத்தில் ஒரு மனைவியை வைத்துக் கொண்டு அனைவரும் சமாளிக்கும் நிலையில் இவர் 39 மனைவிகளை சமாளிக்கிறார். இப்படிப்பட்ட ஒருவரை பாராட்டியே ஆக வேண்டும்

Categories

Tech |