தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் மதிமுகவின் தனித்தன்மையை காக்க வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம். இது தொடர்பாக எந்த அழுத்தமும் எங்களுக்கு தரப்படவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷனின் முடங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என அவர் கூறியுள்ளார்.