Categories
மாநில செய்திகள்

தனி பொருளாதார உதவிகளை அறிவிக்கவேண்டும்…. வானதி சீனிவாசன் வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த 11 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று கோவை தெற்கு தொகுதியில் உள்ள ரேஷன் கடைகளையும் தடுப்பூசி முகாம்களையும் பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தொடர் ஊரடங்கு காரணமாக மக்களின் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். ஊரடங்கு தொடரப்பட்டுள்ள கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு தனி பொருளாதார உதவிகள் அறிவிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |