சென்னை மாநகராட்சியில் சுமார் 13 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அரையாண்டுக்கு தல எழுநூறு கோடி ரூபாய் எனவும் வருடத்திற்கு 1400 கோடி ரூபாய் வரை என வருவாய் கிடைக்கின்றது. சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்தினால் ஐந்து சதவீதம் அல்லது ஐந்தாயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். அதற்கு பின்னர் சொத்து வரி செலுத்தினால் இரண்டு சதவீதம் தனி வட்டி விதிக்கப்படும்.
இந்த நிதியாண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதால் ஜனவரி 12ஆம் தேதி வரை தனிவட்டி இல்லாமல் சொத்துவரி செலுத்தலாம் என சென்னை மாநகராட்சி கால அவகாசம் வழங்கியது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கு ஜனவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பணிகள் துறைக்கு நகர திட்டமிடல் துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கட்டணங்களை மாற்றி அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.