Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனி விமானத்தில் செல்லப் பிராணியுடன் ஊர் சுற்றிய கீர்த்தி”…. போட்டோ இணையத்தில் வைரல்…!!!!!

தனது செல்லப்பிராணியுடன் தனி விமானத்தில் ஊர் சுற்றியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தமிழ் சினிமா உலகில் சென்ற 2015 ஆம் வருடம் விஜய் இயக்கத்தில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். இத்திரைப்படம் நல்ல வெற்றியை பெறவில்லை என்றாலும் கீர்த்தி சுரேஷிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அவர் தொடரி, ரஜினிமுருகன், ரெமோ உள்ளிட்ட சில படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். கீர்த்தி சுரேஷ் தற்பொழுது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சாணிக் காகிதம் திரைப்படத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் தனது செல்லப்பிராணி நாயுடன் தனி விமானத்தில் சுற்றியுள்ளார் கீர்த்தி சுரேஷ். அப்போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில்  பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |