நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் தனி விமானத்தில் கொச்சின் சென்றுள்ளனர்.
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பின் போது இவர்களுக்கு காதல் மலர்ந்துள்ளது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவ்வப்போது விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் இணைந்து பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விதவிதமான புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
https://twitter.com/NayantharaU/status/1380886327588048898
இந்நிலையில் தனி விமானத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கொச்சின் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.