தனுஷ், ரஜினி பற்றி சொன்ன விஷயம் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷும் ஐஸ்வர்யாவும் கடந்த 2004ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 18 வருடங்கள் சுமூகமாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தார்கள். பிரிவுக்குப் பின் இருவரும் அவரவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்கள்.
இந்த நிலையில் ரஜினி பற்றி தனுஷ் ஒன்றை கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, தனுஷூம் ரஜினியும் இதுவரை வீட்டில் வேலை பற்றி பேசியதே இல்லையாம். இதைக் கேட்ட ரசிகர்கள் வியந்து போயுள்ளனர். இதனிடையே ஐஸ்வர்யா, தங்கை சௌந்தர்யாவின் கணவரான விசாகனை வைத்து படம் இயக்க இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் தன் கணவன் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பது சௌந்தர்யாவுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.