Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கான சித்திரை மாத பலன்…75% நன்மைகள் நடக்கும்.. பல சிக்கல்கள் ஏற்படும்..!!

தனுசு ராசிகான சித்திரை மாத பலன்கள்..!  பூராடம், உத்திராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்த தங்களுக்கு இந்த சித்திரை மாத பலன்கள் என்ற அடிப்படையில் 2020ஆம் ஆண்டு மங்கலகரமான சார்வரி வருடம் சித்திரை மாதத்திற்கு உண்டான சுபபலன்கள், அசுப பலன்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட திசைகள் மற்றும் வணங்க வேண்டிய தெய்வங்கள், சந்திராஷ்டம தினங்கள்,  பற்றி பார்க்கலாம். உங்களுடைய ராசிக்கு அதிபதியாக விளங்கக்கூடிய குருபகவான் எத்தனை தெய்வங்கள் இருந்தாலும் உங்கள் ராசிக்கு அனைத்து செய்யக்கூடிய தெய்வம்.

எத்தனை குழந்தைகள் இருந்தாலும், நம்ம குழந்தைகள் தான் நமக்கு வாரிசுகள் அதுபோல எத்தனை தெய்வங்கள் இருந்தாலும் அதிபதி குரு பகவான். குரு பிரம்மா ,சுப்பிரமணியம், குரு பகவானை மனதில் நினைத்து கொண்டு அன்றாட காரியங்களை துவங்கினால் உங்களுக்கு அந்த காரியங்கள் நல்லபடியாக நடக்கும். காலம் முழுவதும் ஜோதிட ரீதியாக ஜாதக ரீதியாக இருக்கக்கூடிய தோஷங்கள் விலகும், என்று கூறிக்கொண்டு குருவை பிரார்த்தனை செய்து அந்நிகழ்ச்சி மேற்கொள்ளுங்கள்.

ஜென்ம சனி இருக்கும் போது அவ்வளவாக நன்மைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது ஏனென்றால் வீண் அலைச்சலை கொடுப்பார், தேவையில்லாத பிரச்சினை, பழைய பிரச்சினை எல்லாம் முன்னாடி வரும். குடும்பத்திற்குள்ளேயே வம்பு வழக்கு சண்டை பிரச்சனை மனஸ்தாபம் கோபம் இவையெல்லாம் ஏற்படும். அதிலும் கேது இருப்பதனால் வம்பு வழக்கு இதற்கெல்லாம் அதிபதி, கோர்ட் கேஸ் பிரச்சனை போலீஸ் பிரச்சனை இந்த மாதிரியெல்லாம் ஏற்படும். வாங்குவது விற்பது பூர்வீக சொத்து, கணவன் மனைவிக்குள் விவாகரத்து இந்த மாதிரியான பிரச்சினைகள் வம்பு வழக்குகள் போன்றவை வரும்.

சனி இருக்கும் பொழுதும் மனதை நிம்மதியாக வைத்துக்கொள்ள முடியாது. சரியாக சாப்பிட முடியாது, தூங்கவும் முடியாது, ஐயோ இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் ஒருவேளை ஒருத்தன் எம்மிடம் ஒப்படைத்து அரைகுறையாக செய்து விட்டு சென்று விடுவோம். மீண்டும் அதை இன்னொரு ஆள் கூப்பிட்டு இந்த வேலை செய்ய வேண்டும் இந்த மாதிரி இருக்க கூடிய ஒரு சூழ்நிலை ஆக இந்த ஜென்மச் சனியால் ஏற்படுத்துவார். ராசிநாதன் அப்படி என்றால் குரு பகவான் அதிசாரம் பெற்று இரண்டாம் இடத்திற்கு சென்று செவ்வாயோடு சேர்ந்து விளங்குவார். அது மிகப்பெரிய யோகம், குடும்பம் வாக்கு தனம் என்று சொல்லக்கூடிய இடத்தில் குரு செவ்வாய் சேர்க்கை என்பது பலவிதமான நன்மைகளைச் செய்யும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

இறைவழிபாடு செய்யக் கூடிய அமைப்புக்கள். குடும்பத்தோடு சேர்ந்து கோவிலுக்கு போவது கோவில் அன்னதானம் பெறுவது யாகங்கள் செய்வது பரிகாரங்கள் செய்வது அன்னதானங்கள் இந்த மாதிரியான விஷயங்கள் நடக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்குவீர்கள். மகிழ்ச்சி அடைய கூடிய நேரம் இது குழந்தைகள் மூலமாக நன்மைகள் இவையெல்லாம் குரு கொடுப்பார் என்றால் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சேர்ந்து இருப்பதால் பூமி வாங்கலாம் மனை வாங்கலாம் வீடு வாங்கலாம் வீடு கட்டலாம் கிரகப்பிரவேசம் செய்யலாம் இதனால் விவசாயம் செய்யலாம் தொழில் செய்யலாம் விவசாய உபகரணங்கள் வியாபாரம் செய்யலாம். அது பூமி சம்பந்தமான தொழில் செய்பவர்கள் விவசாயம் ரியல் எஸ்டேட் இதையெல்லாம் செய்பவர்கள் மிகச் சிறப்பாக சிறப்பான மாதமாக இந்த மாதம் விளங்குகிறது.

நான்காவது இடத்தில் குரு உடைய வீட்டில் புதன் அதாவது சகோதர சகோதரிகளே அனுசரித்துச் செல்லவேண்டும். தேவையில்லாத பகையை ஏற்படுத்திவிடும். பழைய பிரச்சினைகள் வரும் மனஸ்தாபங்கள் வரும் அதேசமயம் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கல்வியில் சிறந்து விளங்க கூடிய சிறு கல்வி எல்கேஜி யுகேஜி லிருந்து ஒரு உயர் கல்வி வரை படிப்பவர்களுக்கு எல்லாம் சிறந்து விளங்கக்கூடிய அமைப்பு முதல் மதிப்பெண்கள் எடுக்க கூடிய அமைப்பு ஆசிரியர்கள் பேராசிரியர்களுக்கு பாராட்டு வாங்க கூடிய அமைப்பு அதேசமயம் கல்வித் துறையில் இருப்பவர்களுக்கும் சிறப்பான யோகங்கள் மேலதிகாரிகளிடம் பாராட்டு சம்பள உயர்வு இவையெல்லாம் கிடைக்கும்.

ஐந்தாம் இடத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமான வலுப்பெற்று சூரியன் சஞ்சரிக்கிறார்;  பித்ருக்கள் என்று சொல்லக்கூடிய முன்னோர்களின் சொத்துக்கள் பூர்வீக சொத்துக்கள் அப்பாவை சொத்துக்கள் வரக்கூடிய நேரம் இப்பொழுது நமக்கு உண்டு கண்டிப்பாக வரும் நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் உங்களை விடாது தானாக வந்து சேரக்கூடிய ஒரு அமைப்பு ஏற்படும். இவ்வளவு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து சாதகமாக அமையும். ஆண் வாரிசுகள் பிறக்கும். அரசுத் துறையில் வேலை கிடைக்கும். அரசுத் துறையில் வேலை செய்பவர்களுக்கு நன்மை பாராட்டு, பெயர், புகழ், அந்தஸ்து, கௌரவம், பணி உயர்வு, சம்பள உயர்வு எல்லாமே கிடைக்கும். அதுவும் மத்திய அரசில் வேலை செய்பவர்கள் குறிப்பாக சொல்லப்போனால் ரயில்வே துறை போக்குவரத்துத் துறை மிக சிறப்பான யோகங்கள் கிடைக்கும்.

ஆறாம் இடத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கும்;  பெண்களால் பிரச்சினை வரும். ஆண்களால் தனுசு ராசி நேயர்களுக்கு பெண்களால் பிரச்சினைகள் கொஞ்சம் வரக்கூடிய காலகட்டம். எதிரிகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உடல்நிலை கோளாறு நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடிய அமைப்புகள் ஏற்படும். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். ஏழாம் இடம் களத்திர ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ராகு சஞ்சரிப்பதால் இவர் சிறப்பான யோகம் வெளிநாடு போக வேண்டிய அமைப்பு வெளிநாட்டில் இருந்து நமக்கு வரக்கூடிய பணம் பொருள் வரவேண்டியிருக்கிறது. அவர்களின் மூலமாக செய்திகள் வரவேண்டியிருக்கிறது. வெளிநாட்டு தொடர்புகள் வியாபாரங்கள் அந்நிய முதலீடுகள் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்கள் எல்லாவற்றிலுமே நன்மை பயக்கக் கூடிய ஒரு நல்ல மாதமாக தான் இந்த மாதம் விளங்கும்.

பொதுவாக தனுசு ராசி என்று எடுத்துகொண்டாள் 100க்கு 75 சதவீதம் நன்மைகளை பெறக்கூடிய விதமாகவும், கல்வி பயிலும் மாணவர்களுக்கு 90% நன்மைகளும், கலைத்துறை அரசியல்வாதிகள் பெண்கள் அவர்களுக்கு 80 சதவீத நன்மைகளும், சுய தொழில் உத்தியோகம் வியாபாரம், விவசாயம் செய்பவர்களுக்கு 80 சதவீத நன்மைகளும், ஏற்படக்கூடிய ஒரு நல்ல மாதமாக தான் விளங்குகிறது. இன்று தனுசு ராசி நேயர்களும் முக்கியமான பணிகளை தவிர்க்க வேண்டி வரும் சந்திராஷ்டம தினம் என்று வரும் சித்திரை மாதம் 16ம் நாள் புதன்கிழமை மாலை நாலு மணி 29 நிமிடம் முதல் சித்திரை மாதம் 18ம் நாள் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி 45 நிமிடம் வரை சஞ்சரிக்கிறது அந்த நேரத்தில் முக்கியமான பணிகளை தவிர்த்து இறை வழிபாடு மேற்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்டமான வண்ணம்:  மஞ்சள், சிகப்பு

அதிர்ஷ்டமான எண்: 9

அனுகூலமான திசை:  வடக்கு

வணங்க வேண்டிய தெய்வம்: திருச்செந்தூர் செந்திலாண்டவர்

 திருச்செந்தூர் சுப்பிரமணியன் அவரை வழிபட்டு இந்த மாதத்தை ஒரு இனிமையான மாதமாக மாற்றிக்கொள்ளுங்கள்.

Categories

Tech |