Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு… அலைச்சல் அதிகரிக்கும்.. முன்கோபத்தை தவிர்த்திடுங்கள்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று அலைச்சல் அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். முன்கோபத்தை தவிர்த்தால் மட்டுமே இன்று நீங்கள் முன்னேற்றம் காணலாம். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். திடீரென்று கொஞ்சம் குழப்பம் அடையலாம் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் உண்டாகும். செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் உயரக் கூடிய காலமாக இது இருந்தாலும் நிறைய செலவு கொஞ்சம் இருக்கும். செலவை கட்டுப்படுத்துவதற்கு கண்டிப்பாக நீங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கடன் பிரச்சினைகள் ஏதும் இன்று வராது. சில முக்கியமான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க கூடும் என்பதால் எதிலும் கவனம் இருப்பது ரொம்ப நல்லது. அதாவது குடும்பத்தில் அவ்வப்போது வாக்குவாதங்கள் மட்டும் வந்து செல்லும், இதையேதான் பிரச்சினை என்று சொல்வார்கள். அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொண்டு அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ளுங்கள். கூடுமானவரை உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். எடுத்துக் கொள்ளக் கூடிய உணவு வகைககளிலும் ரொம்ப காரணமாகத்தான் நீங்கள் இருக்க வேண்டும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்வது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுபோலவே இன்று சூரியபகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்வது ரொம்ப நல்லது. காரியங்கள் அனைத்துமே கைகூடும். நீங்கள் நினைத்தது ஓரளவு நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |