தனுசு ராசி அன்பர்களே..! இன்று சந்தோச எண்ணங்களால் உற்சாகம் அடையக்கூடும். பிறருக்கு இயன்ற அளவில் உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க புதிய அனுகூலம் உருவாகும். தாராள பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டை அழகுபடுத்த கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்க கூடும். இன்று எடுத்த காரியம் வெற்றியை கொடுக்கும், அதனால் மேலதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்கும்.
எந்த ஒரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உடல்நலக் குறைவுகளை அடிக்கடி சந்திக்க கூடிய சூழல் உருவாகும். கூடுமானவரை உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக கூடும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ஓரளவு சிறப்பை கொடுக்கும். அக்கம்பக்கத்தினர் இடம் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது, ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று இல்லத்தில் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்