தனுசு ராசி அன்பர்களே..! இன்று கடந்த கால உழைப்பின் பலனை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விடாமுயற்சியால் நிலுவைப்பணம் வசூலாகும். அரசு வகையில் நன்மை எதிர்பார்க்க கூடும். பிள்ளைகளுக்கு விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும், முயற்சிகளில் ஓரளவு சாதகமான பலன் கிடைக்கும் .எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும், மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படிப்பது ரொம்ப நல்லது. மதிப்பெண்கள் எடுப்பதற்கு இது உதவும்.
உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள், மனநிலையிலும் உணவு வகையிலும் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் இருப்பது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.
அது மட்டும் இல்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5:
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்