Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு..ஒத்துழைப்பு கிடைக்கும்..சிக்கல்கள் இருக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..!இன்று திட்டமிட்ட பணிகளில் கொஞ்சம் சிக்கல்கள் இருக்கும் நாளாகவே இருக்கும். பணி நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்லக் கூடும். பெண்களுக்கு வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீண் பகைகள்  ஏற்பட்டு பின்னர் விலகிச்செல்லும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கள் கிடைப்பதில் கொஞ்சம் விமர்சனம் இருக்கத்தான் செய்யும். திடீர் கோபம் ஏற்படும் வீண் செலவு கடுமையாக இருக்கும். குடும்பத்தாரிடம் பிடிவாதத்தை தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். அதே போல மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள் படித்ததை எழுதிப் பாருங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். மனம் அமைதியாக வைத்துக் கொண்டாள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும் அதற்காக நீங்கள் இரண்டு நிமிடம் தியானம் இருந்த பின்னர் பாடங்களை படிப்பது ரொம்ப சிறப்பு. அதுமட்டுமில்லை தேர்வு முடியும் வரை காரமான உணவு வகைகளை நீங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இரவில் தூங்கச் செல்வதற்கு முன் பசும்பால் அருந்தி விட்டு தூங்கச் சென்றால் படித்த பாடத்தை நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் அது மட்டும் இல்லை என்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிஷ்ட திசை: தெற்கு ‘

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |