Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு..கவலைகள் தீரும்..தர்ம சிந்தனை மேலோங்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று பண வரவால் மனம் மகிழும் நாளாகவே இருக்கும். கவலைகள் அனைத்தும் கலைந்து செல்லும். அரசாங்க ஆதரவு மற்றும் வங்கிக் கடன் உதவிகள் தடையின்றி கிடைக்கும். இன்று தொலைநோக்கு சிந்தனை கொள்வீர்கள். அதேநேரத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். எதிரிகள் விலகிச்செல்லும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சினைகள் சரியாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லா வசதிகளும் கிடைக்கும்.

தர்ம சிந்தனை மேலோங்கும். இன்று ஊனமுற்றவர்களுக்கு உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். லாபம் பன்மடங்கு உயரும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று உடலில் வசீகரத் தன்மை கூடும். காதலில் பயப்படக்கூடிய சூழல் இன்று இருக்கும். இன்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் முன்னேறி செல்வீர்கள். மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்தவித தடையுமில்லாமல் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் கருநீல நிறம்

Categories

Tech |