Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு.. குடும்பத்தில் குதூகலம் ஏற்படும்..சவால்களை சமாளிப்பீர்கள்..!!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று நல்லவரின் நட்பால் நலம் காணும் நாளாகவே இருக்கும். பொருளாதார விருத்தி அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு மற்றும் இடமாற்றம் எதிர்பார்த்தபடி அமையலாம். இன்று  எல்லா விதமான சவால்களையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது மட்டும் கொஞ்சம் வேகத்தை குறைத்துக் கொள்வது சிறப்பு. நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உடல்நிலையில் சிறுசிறு மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும், பெரிய கெடுதல்கள் எதுவும் இல்லை.

குடும்பத்தில் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதால் நிம்மதியும், ஒற்றுமையும் ஏற்படும். இன்று வெளியூர் பயணத்தில் புதிய அனுபவத்தை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும். கல்வியில் நல்ல தரதேர்ச்சி இருக்கக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல மதிப்பெண்களையும் அவர்கள் எடுப்பார்கள். இருந்தாலும் தேர்வு முடியும் வரை கொஞ்சம் கவனமாக இருங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள், அது போதும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சனிக்கிழமை என்பதால் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுப்பதற்கு வாரவாரம் பழகிக் கொள்ளுங்கள், உங்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை நீங்களே உணரலாம்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |