தனுசு ராசி அன்பர்களே..! இன்று புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிபுரிய நேரிடும். சராசரி அளவில் பணவரவு இருக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த செய்திகள் வர தாமதமாகும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். இன்று பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உடல் களைப்பும், சோர்வும் ஏற்படலாம். கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு எந்த காரியத்தில் ஈடுபடும் பொழுது யோசித்து செயல்படுவது, ரொம்ப நல்லது.
வீண் அலைச்சல் கொஞ்சம் ஏற்படலாம், செலவு கூடும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை மட்டும் கவனமாக படியுங்கள், படித்துவிட்டு எழுதி இருப்பது ரொம்ப நல்லது. தேர்வு முடியும் வரை பாடத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள், அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,
சிவப்பு நிறமும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியங்களும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் நட்சத்திர பலன்கள்