Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…சகோதரர் வழியில் உதவிகள் கிடைக்கும்..திருமண பேச்சுவார்த்தை கூடும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.வேற்று  மதத்தவர் உங்களுக்கு உதவிகளையும் முக்கியமாக அவர்கள் மூலம் நல்ல பலனையும் இன்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடும். வியாபாரத்தில் எடுத்த முயற்சிகள் பலிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். இன்று  குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.

கணவன் மனைவிக்கு இடையே சின்னச்சின்ன கருத்து வேற்றுமைகள் ஏற்படும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலைக் கொடுக்கும் படி இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களையும் வாங்குவீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல மதிப்பெண்களை வாங்க கூடும். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள், யாருக்கும் எந்த வாக்குறுதிகளையும் இன்று நீங்கள் கொடுக்க வேண்டாம், ரொம்ப கவனமாக இருங்கள். யாரிடமும் கடன் வாங்காதீர்கள். பணத்தை கடனாக நீங்களும் கொடுக்காதீர்கள். கவனமாக இருங்கள். அதேபோல தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்கள் உணவு பழக்கவழக்கங்களில் கொஞ்சம் சில மாற்றங்களை செய்யுங்கள்.

அதாவது காரமான உணவு வகைகளை தவிர்த்து விட்டு, பழங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். இரவில் தூங்குவதற்கு முன் பசும்பால் அருந்தி விட்டுச் செல்வது நல்லது. உங்களுடைய மனநிலையை எப்பொழுதும் நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு இரண்டு நிமிடம் தியானம் மேற்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெளிர் நீல நிறம் உங்களுக்கு ஓரளவு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |