Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…தனலாபம் கிடைக்கும்.. மரியாதை கூடும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று தனலாபமும், கல்வியில் முன்னேற்றமும் ஏற்படும். மதிப்பும், மரியாதையும் கூடும். மனைவி, மக்களின்  உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். பெண்களின் உதவிகளை இன்று நீங்கள் பெறக்கூடும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு ஓரளவுக்கு முன்னேற்றமான பலன்கள் ஏற்படும், என்றாலும் வேலை பளுவும் பொறுப்புகளும் அதிகரிக்கும்.  இந்த பணி முடிப்பதற்கும் கடின உழைப்பு நீங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுகள் உங்களுக்கு ஓரளவு உற்சாகத்தை ஏற்படுத்தும்.

மனமும் உற்சாகமாகவே காணப்படும். முடிந்தால் இன்று  ஆன்மீகப் பயணங்கள் செய்வது ரொம்ப நல்லது ஆலயம். ஆலயம்  சென்று பாருங்கள் மனம் நிம்மதி ஆகவே இருக்கும்.மற்றவரிடம் எந்த ஒரு பொறுப்பையும் எப்பொழுதும் ஒப்படைக்க வேண்டாம். வெளியூர் பயணம் லாபத்தை கொடுப்பதாகவே அமையும். மாணவர்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முன்னேற்றம் ஏற்படும். கடுமையாக உழைத்தால் மேன்மேலும் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். தேர்வு முடியும் வரை கொஞ்சம் கடுமையாகவே உழைத்து பாடங்களைப் படியுங்கள், அது போதும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |