தனுசு ராசி அன்பர்களே..! இன்று இனி செய்திகள் இல்லம் தேடி வரக்கூடிய நாளாகவே இருக்கும். வாழ்க்கை தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். பொது வாழ்வில் புகழ் கூடும் நாளாகவே இருக்கும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். தொழில் நலன் கருதி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். இன்று மன குழப்பம் கொஞ்சம் இருந்துகொண்டே இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்கள் கூடுதலாக பொறுப்பு இன்று சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள், எதிலும் எச்சரிக்கையாக இருங்கள்.
இன்று செய்யும் காரியங்களில் ஓரளவு தடை தாமதம் கூட வந்து செல்லலாம், முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். ஆன்மீக நாட்டம் செல்லும். இன்று தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள், தயவுசெய்து எழுதிப்பாருங்கள். அதுமட்டுமில்லாமல் தேர்வு முடியும் வரை காரமான உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். பழ வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள், இரவில் தூங்கச் செல்லும் பொழுது பால் அருந்தி விட்டுச் செல்லுங்கள். உங்களுடைய மனதை அமைதியாக வைத்துக் கொள்வதற்கு உதவும்.
மனதை அமைதியாக வைத்துக் கொண்டாலே நல்ல முன்னேற்றம் ஏற்படும். முடிந்தால் இரண்டு நிமிடம் தியானம் இருந்துவிட்டு பின்னர் பாடங்களை படிப்பது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்