Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! தெளிவு பிறக்கும்….! குழப்பங்கள் நீங்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! பெற்றோர்கள் வழியில் இருந்த பகை நீங்கி விடும்.

இன்று எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். எந்த ஒரு பணியில் ஈடுபட்டாலும் அந்த பணி உங்களால் சிறப்பாக செய்ய முடியும். கூடுதல் கவனத்துடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முன்னோர்கள் சொத்துக்கள் கைகூடி வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும். எதிர்பார்த்த ஆதாயம் கண்டிப்பாக கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மனம் கொஞ்சம் தெளிந்த நீரோடை போல இருக்கும். குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். சுபகாரிய பேச்சுகள் நல்ல முறையில் நடக்கும் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்யமுடியும். சிலருக்கு புதிய பதவிகள் கண்டிப்பாக தேடி வரும். பெற்றோர்கள் வழியில் இருந்த பகை நீங்கி விடும். உறவினர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

தன்னிச்சையான முடிவுகளில் தெளிவாக இருப்பீர்கள். வழக்குகள் அனைத்தும் சாதகமான தீர்ப்பை கொடுக்கும். பெண்களுக்கு நிர்வாகத்திறமை கூடும். காதலில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி இருக்கும். காதல் கைகூடும். காதலில் உள்ள பிரச்சனைகளும் சரியாகும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை ஏற்படும். கல்வியில் சாதிக்கக்கூடிய அம்சம் இருக்கின்றது. கல்விக்காக எடுத்த முயற்சிகள் அனைத்தும் சிறப்பை கொடுப்பதாக இருக்கும். மாணவர்கள் தைரியமாக முடிவுகளை எடுக்கலாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பழுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: பழுப்பு மற்றும் அடர் நீலம்

Categories

Tech |