தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்களில் பேச்சு செயலில் தயக்கம் கொஞ்சம் ஏற்படலாம், தொழிலில் லாபம் சுமாரான அளவில் இருக்கும். பெண்கள் செலவுக்காக கடன் வாங்க நேரிடும். பிராணிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. இன்று எல்லா நன்மைகளும் உங்களை தேடி வரக்கூடும். இன்று அலைச்சல் கொஞ்சம் குறையும். அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்க மாட்டார்கள். இன்று பிரச்சினையை கண்டு பயப்படாமல் கையாளுவீர்கள்.
உங்களுடைய கோபமான பேச்சு, டென்ஷன் இன்று குறையும். மனம் அமைதியாக செயல்படுங்கள் அதே போல பெரியோரிடம் ஆலோசனை கேட்டு முக்கிய பணியில் ஈடுபடுங்கள். இன்று முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள், ரொம்ப சிறப்பாகவே இருக்கும். மாணவர்களுக்கு எந்தவித தடையுமில்லை கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அவர்கள் அடையக்கூடும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற் கொள்ளும்போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்