தனுசு ராசி அன்பர்களே..! இன்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிட்டும் நாளாகவே இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவீர்கள். வேலை ஆட்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சற்று தாமதப்படும். பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். இன்று நன்மைகள் உண்டாகும். மன பயம் விலகி செல்லும். எல்லோரிடமும் அனுசரித்து பேசவேண்டும்.
பேச்சின் மூலம் காரிய வெற்றியும் காண்பீர்கள். பணவரவு கூடும், சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். இன்று மாணவர்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை பெறுவார்கள். தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற கூடும். அதுமட்டுமில்லை தேர்வு முடியும் வரை உணவு கட்டுப்பாட்டில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். தேர்வு முடியும் வரை கொஞ்சம் கடினமாக பாடங்களைப் படியுங்கள்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்:-3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்