தனுசு ராசி அன்பர்களே..! இன்று புதிய நபர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். இயன்ற அளவில் பிறருக்கு உதவிகள் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற அதிகமாக உழைப்பீர்கள். பணவரவு சீராக இருக்கும். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பை பின்பற்றாமல் தவற வேண்டும்.
நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாகவே இருக்கும். பயணங்களால் வீண் செலவு இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாவதால் ஏற்றமிகு பலனை நீங்கள் இன்று பெறக்கூடும். நட்பு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உடல் ஆரோக்கியமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். காதல் வயப்பட கூடிய சூழல் இருக்கும். அதேபோல கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்