தனுசு ராசி அன்பர்களே..! இன்று பொறுப்புகள் கூடும் நாளாகவே இருக்கும். அடுத்தவரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெற்று மகிழ்ச்சியை கொடுக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும் வேலை கொஞ்சம் குறையும். பற்றாக்குறையை நிவர்த்தி ஆகும். இன்று பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பதும் நல்லது. குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சியும் இருக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். தந்தையிடம் எந்தவித வாக்குவாதம் செய்யாமல் இருப்பது ரொம்ப நல்லது. இன்று மாணவச் செல்வங்கள் படித்ததை எழுதிப் பார்ப்பது ரொம்ப சிறப்பை கொடுக்கும். கூடுமானவரை அவரிடம் எந்த வித பாகுபாடுமின்றி இல்லாமல் பேசுங்கள், அது போதும்.
இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்