தனுசு ராசி அன்பர்களே, இன்று சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிக்க கூடும். சாதிக்கும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும்.
இன்று தொழில் வியாபாரம் சுமாராகவே நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். சிலர் உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் இப்பொழுது உங்களை புரிந்து கொள்வார்கள். உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். கொஞ்சம் மனவருத்தம் நீங்கும் நாளாகவே இன்று இருக்கும். எதிர்பாராத வகையில் சில நண்பர்களை சந்திக்கக்கூடும்.
பால்ய நண்பர்கள் மூலம் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். இன்றைய நாள் இறை வழிபாட்டுடன் தொடங்குங்கள், மேலும் சிறப்பைக் காணலாம். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு பரிபூரணமாக கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,
உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சிவராத்திரி என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீலம் மஞ்சள் நிறம்