தனுசு ராசி அன்பர்களே..! இன்று வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். தேவையில்லாத விஷயத்திற்காக மனகுழப்பம் கொஞ்சம் அடையக்கூடும். இடையூறு செய்தவர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். மனதில் நம்பிக்கை பிறக்கும். துணிச்சல் கூடும். எதிரிகள் உங்களிடம் நட்பாக பழகுவார்கள். வீண் அலைச்சல் அவ்வப்போது வந்து செல்லும்.
எடுத்த வேலையை ஓரளவு சிறப்பாகவே செய்து முடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறி செல்வீர்கள். காரியங்களும் நல்லபடியாகவே முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். வாக்குறுதிகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். வீண் வம்பு வழக்குகளை தயவுசெய்து கலந்து கொள்ள வேண்டாம். யாருக்கும் பஞ்சாயத்துகள் ஏதும் செய்ய வேண்டாம்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் வெள்ளை நிறம்