தனுசு ராசி அன்பர்களே..! இன்று இறைவன் வழிபாட்டை மேற்கொண்டு மகத்துவம் காண வேண்டிய நாளாகவே இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொலைபேசி வழித் தகவல் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். பயணத்தால் பலன் கிடைக்கும். இன்று உடனிருப்பவர்களின் சிறு, சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குவாதங்களை தவிர்த்து சாதுரியமாக கையாளுவது ரொம்ப நல்லது. வரவேண்டிய பணம் வந்துசேரும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக வரவேண்டிய இருந்த பணமும் வந்து சேரும்.
அரசியல்வாதிகளுக்கு இன்று நல்ல முன்னேற்றமும், மகிழ்ச்சிகரமான சம்பவங்களும் நடக்கும். மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்யும் போது மட்டும் கொஞ்சம் கவனமாகவே செய்யுங்கள். மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்தவித தடையும் இல்லாமல் முன்னேற்றம் இருக்கும். கொஞ்சம் கடுமையாக உழைத்து படியுங்கள். ஏனென்றால் தேர்வு நெருங்கும் வேளையில் கொஞ்சம் கடினப்பட்டு படிப்பது ரொம்ப நல்லது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இரண்டு நிமிடம் தியானம் இருந்து பின்னர் பாடங்களை படிப்பது ரொம்ப சிறப்பு.
உங்களுடைய மனதை நீங்கள் அமைதியாக வைத்துக் கொண்டாலே கல்வியில் நீங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்